வகுப்பு :10 பாடம்: தமிழ் இரண்டாம் தாள் காலம்:2:30 மணி
(i)குறிப்பு கையெழுத்து தெளிவாக இருத்தல் வேண்டும்
(ii)விடைகள் தெளிவாகவும் உரிய அளவினதாகவும் இருத்தல் வேண்டும்
(iii)கட்டுரைகள் முன்னுரை பொருளுரை மற்றும் முடிவுரைகளை பெற்றிருத்தல் வேண்டும்
I எவையேனும் ஐந்தினுக்கு மட்டும் விடையளி: (5)
1) இந்திய விஞ்ஞானிகள் செய்ற்கை கோளை விண்ணில் செலுத்தினர்---------செயப்பாட்டு வினை வாக்கியமாக்கு
2) பாரதியின் பாட்டுத்திறன் மிகவும் நன்று--- உணர்ச்சி வாக்கியமாக்கு
3) அறம் செய விரும்பு--- செய்தி வாக்கியமாக்கு
4) முத்தமிழ் முயன்று படித்தாள். அவர் தேர்வில் முதன்மை பெற்றாள்---- கலவை வாக்கியமாக்கு
5) அவன் ஆடல் பயின்றான் ---- பிறவினை வாக்கியமாக்கு
6) நாள் ஒன்றுக்கு ஒரு திருக்குறளாவது படிக்க வேண்டும்------ கட்டளை வாக்கியமாக்கு
7) “நான் நாளை விழுப்புரம் செல்வேன்” என்று அறிவழகன் கூறினார்---- அயற்கூற்று வாக்கியமாக்கு
II கீழ்காணும் வினாக்கள் அனைத்திற்கும் விடையளி:- 5X1=5
8. அ) விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
ஆ) உள்ளங்கை நெல்லிக்கனி போல்
இ) பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பது போல்
ஏதேனும் ஒன்றினுக்கு மட்டும் பொருள் விளங்க வாக்கியத்தில் அமைத்து எழுதுக
9) வழுஉச் சொற்களை திருத்தி எழுதுக
என் தங்கை வண்ணாத்திப் பூச்சியை பிடிக்க முயற்சித்தாள்
10) மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக
புலி ஊளையிட சிங்கம் கனைத்தது
11) பிறமொழி சொற்களை நீக்கி ஏற்ற தமிழ் சொற்களை எழுதுக
போஸ்ட் ஆபீஸ் சென்று கார்டு கவர் வாங்கி வா
12) ஏற்ற இடங்களில் நிறுத்தற் குறிகளை இடுக
தமிழ் இளைஞர்களே பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கின்றீர்கள் தமிழ் இன்பத்தினும் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ?
III கீழ்கானும் வினாக்களுக்கு விடை எழுதுக 3X2=6
13) பகுபத உறுப்பிலக்கணம் தருக (ஒன்று மட்டும்)
(அ).முடித்த (ஆ)தீண்டினார்
14) பிரித்தெழுதுக
1. பொற்கோட்டுமேரு 2. வெவ்விவிரும்பாணி
15) இலக்கணக் குறிப்பு தருக: (இரண்டு மட்டும்)
1. செங்கை 2. வனைகழல் 3. மதிமுகம்
IV எல்லா வினாக்களுக்கும் விடையைத் தெரிந்து எழுதுக 20X1=20
16) உயிர்மெய் குறில்________மாத்திரை
அ)அரை ஆ)ஒன்று இ)ஒன்றரை ஈ)இரண்டு
17)எஃகு என்பது_____தொடர் குற்றியலுகரம்
அ)நெடில்த் ஆ)உயிர்த் இ)ஆய்தத் ஈ)வன்
18) மொழி____வகைப்படும்
அ) ஒன்று ஆ) இரண்டு இ) மூன்று ஈ) நான்கு
19) ஆதிரையான் என்பது________ வினைமுற்று
20) ”கோப்பெருந்தேவி வந்தது” என்பது ______
அ)பால்வழு ஆ)திணைவழு இ)காலவழு ஈ)இடவழு
21) ஒரு சொல் இரண்டு மூன்று அடுக்கி வருவது__________
அ)ஒரு பொருட்பண்மொழி ஆ)இரட்டை கிளவி
இ)அடுக்குத் தொடர்
22) முற்றாக இருக்கும் சொல் எச்சப்பொருளில் வருவது____ஆகும்
23) கத்துங் குயிலோசை என்று பாரதியார் கூறியதால் இது__________
24) இலக்கண முறைப்படி பேசுதலும் எழுதுதலும்________
25) பொருத்துக
வாழ்க ---- ஏவல் வினைமுற்று
சொல்க ---- உடன்பாடு வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
26) செய்யுளில் ஓசை குறையுமிடத்து குறைந்த ஓசையை நிறைவு செய்வதற்கு அளபெடுப்பது
27) வினா_____ வகைப்படும்
அ) இரண்டு ஆ) நான்று இ) ஆறு ஈ) எட்டு
28) தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? என ஐயுறுவது_____வினா
29) மீமிசை ஞாயிறு என்பது__________
30) பின்வரு நிலையணி_________வகைப்படும்
31) ________என்ற ஒன்று மட்டுமே நிகழ்கால வினையெச்ச வாய்ப்பாடு ஆகும்
32) கயல்விழி மாலை தொடுத்தாள் இதில் தொடுத்தாள் என்பது ___________
அ) எவல் வினைமுற்று ஆ) வியங்கோள் வினைமுற்று இ) குறிப்பு வினைமுற்று
ஈ)தெரிநிலை வினைமுற்று
தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது______
34) கால்பந்து விளையாடுவாயா? என்று கேட்டதற்கு மட்டைப்பந்து விளையாடுவாயா என்று கேட்டதற்கு மட்டை பந்து விளையாடுவேன் என்று கூறுவது__________
அ) நேர்விடை ஆ) சுட்டு விடை இ) இனமொழி விடை ஈ)மறைவிடை
35) இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கவிஞர் தன் மனக்கருத்தை எற்றிக் கூறுவது______ அணி
V) அ) கீழ்கானும் வினாக்களுக்கு எவையேனும் ஆறனுக்கு மட்டும் விடையளி
36) சார்பெழுத்துக்கள் எத்தனை வகைக்ப்படும். யாவை? 6X2=12
37) இன்னிசையள படையை சான்றுடன் விளக்குக?
38) பொது மொழியை விளக்குக
39) ஆய்த எழுத்துக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
40) தெரிநிலை பெயரெச்சத்தை எடுத்துக்காட்டு தந்து விளக்குக?
41) எதிர்நிலை வினையெச்ச வாய்ப்பாடுகள் யாவை?
42) சொல்லாவது யாது? அது எத்தனை வகைப்படும்?
43) வழு, வழா நிலை விளக்குக
ஆ) கீழ்க்கானும் வினாக்களுள் எவையேனும் ஆறனுக்கு மட்டும் விடையளி:
6X2=12
44) இரட்டைக்கிளவி விளக்குக
45) ஒரு பொருட்ப் பன்மொழியை எடுத்துகாட்டு தந்து விளக்குக:
46) அறிவினா என்றால் என்ன? அதன் நோக்கங்களை சுட்டுக
47) வினா எத்தனை வகைப்படும்? அவையாவை?
48) பொருள் பின் வருநிலையணி (அல்லது) தற்குறிப்பேற்ற அணியை எடுத்துகாட்டு தந்து விளக்குக
49) “நெடும்புனலும் வெல்லும் முதலை அரும்புனலின்
நீங்கின் அதனை பிற”
இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக
50) ஐகாரக் குறுக்கம் விளக்குக
VI) 51) கீழ்க்கானும் பாடலைப் படித்து பொருளுணர்ந்து பின் வரும் வினாக்களுக்கு விடை எழுதுக
5X2=10
உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராய்
இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்தமுள்ள இடமெங்கும் சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல் நீண்ட ஆயுள் பெருவாயே!
காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்
காலைத்தொட்டு கும்பிட்டு காலன் ஓடிப்போவான்!
கூழையே நீ குடித்தாழும் குளித்த பிறகு குடியப்பா
ஏழை யேநீ யானாலும் இரவில் நன்றாய் உறங்கப்பா!
தூய காற்றும் நன்னீரும் சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஓட்டி விடுமப்பா நூறுவயதும் தருமப்பா!
வினாக்கள்:
அ) எவை இனிய வாழ்வு தரா?
ஆ) நீண்ட ஆயுளைப்பெறும் வழி என்ன?
இ) காலன் யாரிடம் அணுகான்?
ஈ) ஏழையாயினும் செய்ய வேண்டிய தென்ன?
உ) நூறுவயது வாழ் ஆசிரியர் கூறும் வழி யாவை?
VII {10}
52) நீவாழும் பகுதியில் ஒரு நூலம் அமைத்து தருமாறு பொது நூலகத்துறை இயக்குனருக்கு கூட்டு விண்ணப்பம் வரைக (அல்லது) நீ படித்து மகிழந்த நூல் பற்றி உன் நன்பனுக்கு கடிதம் வரைக
VIII 53) கீழ் கானும் தலைப்புகளுள் ஒன்று குறித்து ஒன்றரைப் பக்கத்திற்க்கு மிகாமல் {10}
கட்டுரை வரைக
அ) சிறு துளி பெறுவெள்ளம்
ஆ) அறிவியல் ஆக்கம்
இ) நீ விரும்பும் கவிஞர்
ஈ) மழை நீர் சேகரிப்பு
IX) 54) கீழ்கானும் தலைப்புகளுள் ஒன்றனுக்கு மட்டும் ஒன்றரைப் பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை வரைக {10}a
அ) சத்தியமா கதை மூலம் தெரியவரும் இரமணனின் பண்பு நலன்கள்
ஆ) தாய்ப்பசு கதை மூலம் தெரியவரும் பசுவின் செயலும் கதை உணர்த்தும் நீதியும்
இ) சபேசன் காப்பியின் வளர்ச்சி
ஈ) சுப்புகுட்டி விலகலுக்கான காரணம்


XtGem Forum catalog